ஆசை! இங்க யாருக்கு இல்லன்னு சொல்லுங்க. எதற்கும் ஆசைப்படாதேன்னு புத்தர் ஆசைப்பட்டார்னு சிலர் கோக்குமாக்குத்தனமா சொல்வாங்க. ஆசை யார விட்டுச்சு. நல்லவங்களுக்கு நல்லது பண்ணனும்னு ஆசை. கெட்டவங்களுக்கு கெட்டது பண்ணனும்னு ஆசை. சிலருக்கு பணத்துமேல ஆசை. சிலருக்கு பொண்ணுக மேல ஆசை. சிலர் தங்களோட ஆசையே மனசுக்குள்ள மட்டும் வெச்சுக்குவாங்க. சிலர் தங்களோட ஆசையா யாருக்கும் பாதிப்பு ஏற்படாம நிறைவேத்திக்குவாங்க. சிலர் பலரை காயப்படுத்தி தங்களோட ஆசைய நிறைவேத்திக்குவாங்க.

ஆசைப்படுறது தப்பு இல்ல... ஆனா, அது நல்லதா, கெட்டதா, மத்தவங்களுக்கு அது பாதிப்பு ஏற்படுத்துதா, இல்லையாங்கிறது தான் இங்க இருக்க பெரிய கேள்வி. ஆசைகள் சீரியஸா தான் இருக்கும்னு இல்ல.. சில சமயம் சில்லியாவும், சில்மிஷத்தனமாவும், ச்சீ, ச்சீ சொல்ல வைக்கிற மாதிரியும் கூட இருக்கும். இதோ! இங்க இன்டர்நெட்ல வெளிப்படியாக கூச்சநாச்சம் இல்லாம தங்களோட சில்லித்தனமான ஆசைகள் பகிர்ந்துட்டவங்க எல்லாம் என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க... 

#1 எனக்கு Blackheads மற்றும் முகப்பருக்களை நீக்கும் காணொளிப் பதிவுகளை காண்பது மிகவும் பிடிக்கும். மற்றும் நான் அதை எனக்கும், மற்றவர்களுக்கும் செய்துவிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவேன்.

#2 எனக்கு அழகான, கவர்ச்சியான பெண்களின் வீடியோக்களை காண்பது என்றால் மிகவும் பிடிக்கும். இது இயல்பு தான் என்றாலும், ஆணாக இருந்துக் கொண்டு, இதை வெளியே அப்பட்டமாக, சத்தமிட்டு எல்லாம் கூற இயலாது அல்லவா.

#3 எனக்கு ஃபிரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டிகளை எடுத்து கடித்து சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அம்மா எத்தனை முறை என்னை திட்டினாலும், ஐஸ் கட்டிகளை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து வீசினாலும், இது என்னால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசையாக நீடிக்கிறது.

#4 வீட்டில் யாரும் இல்லாத போது நிர்வாணமாக தியானம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான காரியம். அதனாலேயே நிறைய தனிமையை விரும்புவேன். தனியாக இருக்கவே மு
யல்வேன்.

 #5 யூடியூபில் நிறைய அழகுக்குறிப்பு வீடியோக்கள் காண்பேன். அப்போதெல்லாம், இவங்க எல்லாம் பண்றத பார்த்தா, நாமேலே தேவலாம் போல. நாம ஏன் ட்ரை பண்ணக் கூடாது என்று தோன்றும். உடனே கேமேராவை எடுத்து வைத்துக் கொண்டு எனக்கு நானே அலங்காரம் செய்துக் கொண்டு வீடியோ எடுத்து கொள்வேன். அதை ஐந்தாறு முறை பார்த்து வயிறு குலுங்க சிரித்துவிட்டு. டெலிட் செய்துவிடுவேன்.

#6 யாரேனும் ஒரு நபருடன் சண்டை இடுவது போல கண்ணாடி முன் நின்று நானே ஒத்திகை பார்ப்பேன். பெரும்பாலும், அன்றைய நாட்களில் என்னுடன் கருத்து வேறுபாடு கொண்ட நபர்களுடன் தான் இந்த ஒத்திகை கண்ணாடி சண்டை நடக்கும். அதே போல, நான் போலியாக அனைவரும் நம்பும் படி கனகட்சிதமாக அழுவேன்.

 #7 என் க்ரஷ் மற்றும், எக்ஸ்-களின் அனைத்து சோசியல் மீடியா முகவரிகளுக்கும் அடிக்கடி விசிட் செய்வேன். அடிக்கடி என்றால் ஒரு நாளில் ஓரிரு முறைகளாவது என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவர்கள் இடும் பதிவுகளை கொண்டே சில சமயம் சந்தோசமாக உணர்வேன், சிலசமயம் சோகமாக உணர்வேன்.

#9 என்னிடம் கிரெடிட் கார்ட் மற்றும் வங்கியில் கடன் கேட்டு கால் செண்டரில் இருந்து யாரேனும் பெண் பேசினால். அவர்களுடன் ஃப்ளர்ட் செய்ய துவங்கிவிடுவேன். எத்தனை நாட்கள் தான் நாம் மட்டுமே தொல்லைகளை தாங்குவது. அவர்களும் கொஞ்சம் இம்சையை அனுபவிக்கட்டுமே.