கதை
14 வயதில் செக்ஸ் அடிக்ட், 17 வயதில் செக்ஸ்... 21 வயதில்...?
நான் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பையன். அம்மா ஹவுஸ் ஃபைவ் ஆனாலும் நிறையா ஃபிரெண்ட்ஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்ற பர்சன். அப்பாவுக்கு 24x7 வர்க் தான். அவரால வர்க் பண்ணாம இருக்க முடியாது. ஒரு பெரிய கம்பெனியில பெரிய பொறுப்புல இருக்காரு. நான், அம்மா, அப்பா மூணு பெரும் சேர்ந்து ஒண்ணா வெளிய போனதா, ஃபங்க்ஷன் அட்டன்ட் பண்ணதா நினைவு தெரிஞ்ச நல்ல இருந்து எனக்கு ஞாபகம் இல்ல. நான் பெரும்பாலும் என் ஃபிரெண்ட்ஸ் கூட தான் வெளிய போவேன்.
அம்மாவுக்கு ஃபங்க்ஷன், விழாக்கள்னா அவ்வளோ பிடிக்கும். ஒரு பேச்சுக்கு கூப்பிட்டா கூட கிளம்பி போயிடுவாங்க. எந்த ஃபங்கஷனும் இல்லாட்டி அவங்களே ஃபிரெண்ட்ஸ் கூட கெட்-டு-கெதர் ஏற்பாடு பண்ணி கொண்டாட ஆரம்பிச்சிடுவாங்க. இது தான் என்னோட சூழல். இது தான் நான் வளர்ந்த விதம். ஒருவேளை அம்மா, அப்பா கூட நிறையா டைம் ஸ்பென்ட் பண்ணி இருந்தாலோ, சிங்கிள் சைல்டா இல்லாம இருந்திருந்தாலோ நான் கொஞ்சம் ஒழுக்கமா இருந்திருப்பேனோனு அடிக்கடி தோணும். ஒரு ஏழு வருஷம்.. ஏழே வருஷம்... 24 மூவில வர மாதிரி ஒரு டைம் மெஷின் வந்தா நான் போய் எல்லாத்தையும் அழிச்சுட்டு வந்திடுவேன்.
அடிப்பட்டு திரும்பி வந்திட்டாலும்... அடிப்பட்ட அந்த வலி வாழ்நாள் முழுக்க நீடிச்சிருக்கும் போல... அப்படியான ஒரு வலி... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் கேட்டதெல்லாம் கிடைச்சது! நிச்சயமா என்ன மாதிரியான ஒரு ஹை-பை பையன உங்க ஸ்கூல், காலேஜ்ல நீங்க பார்த்திருப்பீங்க. பொறாமை கூட பட்டிருக்கலாம். என்னடா இவனுக்கு மட்டும் எல்லாமே கிடைக்காதுன்னு. நீங்க நினைக்கிறது உண்மை இல்ல. எனக்கு எல்லாமே கிடைக்கிறது இல்ல. என்கிட்டே பொருளா எல்லாமே இருக்கலாம். ஆனா, உணர்வு, அக்கறை, பாசம் எல்லாம் ரொம்ப கம்மி. ஒரு மொபைல் போன் புதுசா லான்ச் ஆச்சுனா உடனே அத வாங்கிக்க முடியும்.
ஸ்டைலான பைக், நிறையா கேஜெட்ஸ்னு கேட்டதெல்லாம் கிடைச்சது. 14 வயசுல... நான் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்த ஆரம்பிச்சது என்னோட 14 வயசுல. ஜியோ வரதுக்கு எல்லாம் முன்னாடியே ஜிபி கணக்குல இன்டர்நெட் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். நிறையா அடல்ட் கன்டன்ட் அடிக்ஷன் அந்த வயசுலயே. எனக்கு ஏத்த மாதிரியே நாலு ஃபிரெண்ட்ஸ். அவங்களுக்கு கிடைக்காதத, அவங்கக்கிட்ட இல்லாதத என் கிட்ட இருந்த என் மூலமா உபயோகப்படுத்திக்கிட்டாங்க.
நான் என்ன பண்றேன், எங்க போறேன்னே அக்கறை எடுத்துக்காத சூழல்ல, நான் மொபைல்ல என்ன பாக்குறேன்னு எல்லாம் செக் பண்ண ஒருத்தரும் இல்ல. மொபைல் முழுக்க! என் மொபைல் முழுக்க பார்ன் வீடியோஸ் தான் இருக்கும். பார்ன் வீடியோ ஷேர் பண்றதுக்குன்னே ஒரு க்ரூப் இருக்கும். என்னால பார்ன் பார்க்க முடியாம ஒரு நாள் கூட இருக்க முடியாது. டீனேஜ்ல எல்லாருக்கும் வர அடிக்ஷன் தான். ஆனா, எனக்கு ரொம்ப சின்ன வயசுல, ரொம்ப அதிகமாவே ஏற்பட்டு இருந்துச்சு. படிப்புல ஏவறேஜ் ஸ்டூடண்ட் தான். ஃபெயிலாகுற அளவுக்கு மக்கெல்லம் இல்ல. அம்பது, அறுவது மார்க்காவது எடுத்திடுவேன்.
இல்லன்னா அப்பா கிட்ட பெல்ட் பிய்ய, பிய்ய அடி விழும். கண்டிப்பா என்னால என்ஜினியரிங், ஐ.டி., மாதிரியான படிப்பு எல்லாம் படிக்க முடியாது. அதெல்லாம் ரொம்ப கஷ்டம், நிறையா இன்ட்ரஸ்ட் இருக்கணும். விஸ்காம்! எது ஜாலியான கோர்ஸ்னு விசாரிச்சப்ப எல்லாரும் விஸ்காம் படிக்க சொன்னாங்க. கேமரா, ஷூட்டிங், ஷார்ட்-ஃபிலிம்னு எல்லாமே புதுசா இருந்துச்சு. அப்பாவும் நான் சொன்னதுமே ஒகே சொன்னாரு. நான் எடுத்த ஏவறேஜ் மார்க் , ப்ளஸ் அப்பா கொடுக்க தயாரா இருந்த டொனேசன் வெச்சு ஒரு நல்ல காலேஜ்ல சீட் வாங்கிட்டேன்.
நீ எவ்வளோ பெரிய அப்பாட்டக்கரா இருந்தாலும் காலேஜ்குள்ள ஃபர்ஸ்ட் இயர்ல ஒரு மண்ணும் பண்ண முடியாதுன்னு சீனியர்ஸ் கிளாஸ் எடுத்தாங்க. முதல் ரெண்டு, மூணு மாசம் எனக்கும், சீனியர்ஸ்க்கும் எக்குத்தப்பாவே போயிட்டு இருந்துச்சு. இதுக்கெல்லாம் என்ன முடிவு எடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்ப தான்... ஒரு ஐடியா தோணுச்சு. புரொடியூசர்! எல்லாருக்கும் விஸ்காம்ல ஜாயின் பண்ணதும் ஷார்ட்-ஃபிலிம் டைரக்ட் பண்ணனும்னு ஆசை இருக்கும். நான் மட்டும் புரொடியூஸ் பண்ணேன்.
ஆமா! ஷார்ட் ஃபிலிம் எடுக்குறது ஒன்னும் அவ்வளோ ஈசி இல்ல. குறைஞ்சது 20 -25 ஆயிரம் செலவு பண்ணா தான் சினிமாட்டிக் அளவுல இருக்குற மாதிரி அஞ்சு நிமிஷத்துக்காவது குவாலிட்டியான ஷார்ட் ஃபிலிம் எடுக்க முடியும். இல்லாட்டி என்ன தான் நல்ல கதையா இருந்தாலும் ரிசல்ட் கொஞ்சம் டல்லா தான் இருக்கும். சீனியர்ஸ் ஃபிரெண்ட்ஸ்! முதல் செமஸ்டர் முடிஞ்சு, ரெண்டாவது செமஸ்டர் தொடங்குன டைம் அது. ஷார்ட் ஃபிலிம் எடுக்க நல்ல கதை இருந்தா சொல்லுங்க நான் புரொடியூஸ் பண்றேன், ஆனா, எனக்கு ஃபிலிம் மேக்கிங் பத்தி சொல்லிக் கொடுக்கணும்னு சொல்லி பேச்சுக் கொடுத்தேன். அவங்க ஒரு ஆடு மட்டுனதா நெனச்சாங்க.
நான் அவங்க எல்லாத்தையும் ஆட்டு மந்தையா பயன்படுத்திக்களாம்னு நெனச்சேன். அந்த ஷார்ட் ஃபிலிம் நாங்க முழுசா எடுக்கவே இல்ல. முழுசா தண்ணி, தண்ணி, தண்ணி... ஒரே மாசத்துல கெத்து சீனியர்ஸ் எல்லாம் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஆயிட்டாங்க. ஐ.வி! பொதுவா எல்லாரும் ஐ.வி போறோம்னு சொல்லிட்டு ஊற சுத்தி பார்க்க தான் போவாங்க. ஆனா, நாங்க ரெகுலரா முறையா ஏற்பாடு பண்ணி போற ஐ.வியே ஒரு சுற்றுலா மாதிரி தான் இருக்கும். ஃபிலிம் சிட்டி, லொக்கேஷன்னு வேற லெவல்ல இருக்கும். முதல்ல கோவா போலாம்னு பிளான். எச்.ஓ.டி எங்க மூஞ்சி எல்லாம் பார்த்துட்டு ஒன்னும் வேண்டாம்னு சொல்லிட்டாரு. அப்பறமா கொல்கட்டா போலாம்னு பிளான் பண்ணோம்.
அங்க சத்யஜித்ரே ஃபிலிம் அன்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் இருந்துச்சு. அத காரணமா வெச்சு தான் கேட்டோம். எச்.ஓ.டி ஒகேன்னு சொல்லிட்டாரு. 10 நாள்! என் வாழ்க்கையில முதல் முறையா ட்ரெயின்ல ஒரு பெரிய ட்ராவல்னு அது சொல்லலாம். நிறையா விளையாட்டு கேலின்னு வேற மாதிரியான ஒரு ஃபீலிங். ஹௌராவுல தங்கினா கொஞ்சம் செலவு கம்மி ஆகும்னு சொல்லி கூட வந்த கைடு சொன்னாரு. முதல் ரெண்டு நாள் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல எங்களுக்கு கரக்டான டைம் கிடைக்கல. மூணாவது நாள் தான் கிடைச்சது. முதல் ரெண்டு நாள் கைடு அங்கிருந்த ம்யூசியம், சூப்பர் மார்கெட், அன்னை தெரேசா ஹோம்னு நிறையா இடத்துக்கு கூட்டிட்டு போனாரு.
ரெட் லைட்! அப்ப தான் ஒரு நாள் பஸ்ல ட்ராவல் பண்ணி போயிட்டு இருந்தப்ப கைடு,'அங்க பாருங்கப்பா அதுதான் சோனாகச்சி'ன்னு சொன்னான். அதுவரைக்கும் அப்படி ஒரு ஐடியாவே இல்ல. அவன் சொன்னதுக்கு அப்பறம் தான் உள்ள ஒரு ஆசை துளிர்விட்டுச்சு. ட்ரை பண்ணி தான் பார்க்கலாமேன்னு. அன்னிக்கி நைட்டு ஹௌரால நாங்க தங்கி இருந்த ஹோட்டலுக்கு போனதும் அஞ்சு பேர் மட்டும் சேர்ந்து பிளான் பண்ணோம். கடைசி ரெண்டு நாள்! ஃபிலிம் இன்ஸ்டிடியூட் வர்க் எல்லாம் முடிஞ்ச பிறகு, மீதம் ரெண்டு நாள் இருந்துச்சு..
இனி இந்த ஊருல சுத்தி பார்க்க எதுவும் பெருசா இல்ல. வேணும்னா அவங்கவங்க பார்க்க வேண்டிய இடத்த பிளான் பண்ணி சொல்லுங்க கைட கூட்டிட்டு போக சொல்றேன்னு எச்.ஓ.டி சொன்னாரு. எல்லாரும் ஷாப்பிங் போற ஐடியாவுல இருந்தாங்க. அந்த ரெண்டு நாள் தான் சோனாகச்சிக்கு போக நாங்க பிளான் பண்ணோம். 2 நாள்! எல்லாருக்கும் ஆசை இருந்தாலும். அதுக்குக் மேல பதட்டமும் இருந்துச்சு.
கார்ல ஏறி உட்கார வரைக்கும் ஆசைப்பட்டவன் எல்லாம்... சோனாகச்சிக்கு போதும் பதட்டம் ஆயிட்டாங்க. ரெண்டு பேர், பேசாம திரும்பி போயிடலாம்னு கூட சொன்னாங்க. எல்லாத்தையும் தைரியப்படுத்தி நான் தான் கூட்டிட்டு போனேன். கடைசில ஒருத்தன் மட்டும் நான் வரல நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டு வெளியவே நின்னுட்டான். வெளிய வந்ததும், ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாதிரி ஏதேதோ சொன்னாங்க. சிலர் சொல்றது எல்லாம் சுத்த பொய், உள்ள போய் முக்கிட்டு, வெளிய வந்து ரீல் விடுறாங்கன்னு, அவங்க சொல்றத வெச்சே கண்டுப்பிடிக்கிற அளவுல இருந்துச்சு.
ரெண்டாவது நாள் கூட்டம் கம்மியாச்சு. ஐஞ்சு பேர்ல இருந்து மூணு பேர் மட்டும் தான் ரெண்டாவது நாள் கிளம்பினோம். நடுங்கிட்டேன்! அன்னிக்கி நைட்டு எங்களுக்கு ட்ரெயின். அதனால, சீக்கிரம் கிளம்பி போயிட்டு வந்திடலாம்னு முன்கூட்டியே பிளான் பண்ணிட்டோம். கொஞ்சம் டீசண்டா, ஹை-பையா ட்ரை பண்ணலாம்னு தேடித் பிடிச்சு போனோம். அதுக்குன்னே தனி ரேட்டு... ஏதோ ஒரு மயக்கம்... அனுபவிச்சே தீரனும்ங்கிற துடிப்பு. எல்லாம் முடிஞ்ச பிறகு தான் என்னோட காண்டம் கிழிஞ்சிருந்தத கவனிச்சேன்.
அதுக்கு முந்தின நொடி வரைக்கும் உடம்பு முழுக்க பரவி இருந்த சந்தோஷம் நடுக்கமா மாறிடுச்சு. ஏதாவது ஆயிட்டா... அந்த பொண்ணு எதுவும் ஆகாது பயப்படாதன்னு சொல்றாங்கிறத மட்டும் தான் புரிஞ்சுக்க முடிஞ்சுது. அவ பேசுற பாஷை எதுவும் புரியல. கண்ணு முழுக்க கண்ணீர் தேங்கி நின்னுச்சு. இது மட்டும் வெளிய தெரிஞ்சா என்ன ஆகும்? நான்கிறத தாண்டி இது குடும்ப கௌரவத்தயும் பாதிக்கும்னு ஒரு எண்ணம். ஏதேதோ யோசிச்சேன்.
பேசாமா தற்கொலை பண்ணிக்கிட்டா யாருக்கும் இதுப்பத்தி தெரியாது தானேனும் யோசிச்சேன். கூட வந்த ரெண்டு பேர்கிட்ட சொல்லாமலேயே ரூம்க்கு ஓடி போயிட்டேன். கட்டிலுக்கு கீழ உட்கார்ந்து தேம்பி, தேம்பி அழுதேன். அப்ப தான் சீனியர் அண்ணன் ஒருத்தர் வந்தாரு. என்னடா ஆச்சு ஏன்டா அழுகுறன்னு கேட்டாரு. நடந்தத எல்லாம் சொன்னேன். முதல பளார்னு ஒரு அடி விழுந்துச்சு. அதுக்கப்பறம் சரி! கவலைப்படாத... ஊருக்கு போனாதும் செக்கப் பண்ணி பார்த்துக்கலாம்னு சொன்னாரு. இதப்பத்தி வேற யார்க்கிட்டயும் சொல்லிட்டு இருக்காத. தப்பாயிடும்னு சொல்லி, ஊரு திரும்புற வரைக்கும் அவர் என் கூடயே இருந்தாரு. பயம்! உடம்பு, மனசு முழுக்க பயம் மட்டுமே நிரம்பி இருந்துச்சு.
வேற எத பத்தியும் யோசிக்க முடியல. அந்த சீனியர் ஒரு அட்ரஸ் கொடுத்து போய் செக்கப் பண்ணிட்டு வான்னு சொன்னாரு. கூட வரட்டுமானும் கேட்டாரு. இல்ல நானே தனியா போறேன்னு சொல்லிட்டேன். ஆனா, செக்கப் பண்ண போக பயம். எங்க ரிசல்ட் இருக்குன்னு வந்துடுமோன்னு பயந்து, போயிட்டேன்... ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டாங்கனு சீனியர் கிட்ட பொய் சொன்னேன்.
இனிமேலாவது கொஞ்சம் ஒழுங்கா இருன்னு அட்வைஸ் பண்ணிட்டு, அதப்பத்தி மறந்திட சொன்னாரு. நான் ஏற்கனவே ஒல்லியா தான் இருந்தேன். அந்த நோய்க்கான சிம்ப்டம்ஸ் எல்லாம் எடுத்து படிச்சு பார்த்தேன். சாதாரண காய்ச்சல் வந்தால் கூட ரொம்ப பயந்து நடுங்க ஆரம்பிச்சிடுவேன். மூணு வருஷம் அந்த பயம் இருந்துட்டே தான் இருந்துச்சு. செக்கப் பண்ணிக்கலாமா.. வேணாமா யோசிச்சுட்டே இருந்தேன். அப்பப்ப எங்கயாச்சும் ஓடி போயிடலாம்னும் எல்லாம் கூட தோணுச்சு. கடைசியா... போன வருஷம் எனக்கு ரொம்ப முடியாம போச்சு... உள்ளக்குள்ள பயமும் முத்திப்போய் இருந்துச்சு.
ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண வேண்டிய சூழ்நிலை. அப்ப தான் டெங்கு காய்ச்சல் அதிகமா பரவிட்டு இருந்துச்சு. சரியா எதுவும் சாப்பிட கூட முடியாது. ஏதோ ரிசல்ட் கொண்டு வந்து வெச்சுட்டு டாக்டர் அம்மாக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தார். பிளட் டெஸ்ட் எடுத்து பார்த்தாச்சு... டெங்கு எல்லாம் இல்ல... பிளட் பிளேட்லெட் செல் ரொம்ப கம்மியா இருக்கு. சரியான சாப்பாடு சாப்பிடாம இருக்கான் போல. ஊட்டச்சத்து அதிகமா இருக்குற மாதிரியான ஆரோக்கியாமான உணவு கொடுங்கன்னு மருந்து மாத்திரை எல்லாம் எழுதிக் கொடுத்து ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிட்டாரு. அதுக்கப்பறம் தான் எனக்குள்ள இருந்த பயமே போச்சு. என்ன ஆனாலும் பரவாயில்லன்னு எந்த சந்தேகத்த தீர்த்துக்க டெஸ்ட் எடுக்க போனேன். டைம் காட்... எதுவும் இல்ல.
எனக்கு ஒன்னும் இல்லன்னு அழுதுட்டே அந்த ரிசல்ட் பேப்பர எல்லாம் கிழிச்சு போட்டுட்டு வந்துட்டேன். ஏழு வருசம்! பயம் வாழ்க்கையில நிச்சயமா இருக்கணும். ஜாலியா இருக்கிறது வேற, தறிக்கெட்டு திரியறது வேற. நான் ரொம்ப மோசமான ஒருத்தனா தான் இருந்தேன். 14 வயசுல இருந்து 21 வயசு வரைக்கும் அந்த ஏழு வருஷத்த என் வாழ்நாள்ல மறக்கவே முடியாது. வாழ்க்கையில எதெல்லாம் போதையோ அத எல்லாம் பெரும்பாலும் நான் ட்ரை பண்ண காலம் அது. அதுக்கெல்லாம் சேர்த்து காலேஜ் வாழ்க்கையில அந்த ரெண்டு வருஷம் நான் ரொம்பவே அவதிப்பட்டேன். வாழ்க்கையில பயம் எவ்வளவு அவசியம்னு அந்த காலத்துல தான் புரிஞ்சுக்கிட்டேன். இப்போ எந்த போதையும் இல்ல, பயமும் இல்ல. ஆனா, வாழ்க்கை மேல ரொம்ப பெரிய ஆசை வந்திருக்கு.. ஒழுங்கா வாழனும்கிற ஆசை!

Post a Comment
0 Comments